இலங்­கையில் இடம்­பெற்ற போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ள காத்­தி­ர­மான வழி­முறை அவ­சியம் என அமெ­ரிக்கா மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

2018 ஆம் ஆண்டு தெற்­கா­சி­யா­வுக்­காக செல­வி­டப்­படும் நிதி தொடர்பில் நடை­பெற்ற நிகழ்வில் இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்கள் தொடர்பான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரி­வித்­துள்ளார்.

போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்க­ளுக்கு நீதியை நிலைநாட்­டு­வது தொடா்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்­தது. அதனை நிறை­வேற்­று­வது தொடர்பில் இலங்­கை­யுடன் இணைந்து அமெ­ரிக்கா செயற்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை தொடர்பான திட்­ட­வட்­ட­மான நட­வ­டிக்கை பட்­டியல் ஒன்­றையும் சர்­வ­தேச இராஜ­தந்­தி­ரிகள் முன்­னி­லையில் அவரால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய மாகாண சபை­க­ளுக்கு அதிக நிர்­வாக அதி­கா­ரங்­களை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்டம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக சர்வதேச தரத்­திற்கு பொருந்தும் மற்­றொரு சட்டம், இரா­ணு­வத்­தி­னரால்  கைப்­பற்­றப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை மீட்­டெ­டுத்தல்,  காணாமற் போனோர் தொட

ர்பான அலு­வ­ல­கத்தை நிறு­வுதல், உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிறு­வுதல் ,இழப்­பீட்டு அலு­வ­லகம் மற்றும் போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்க மற்றும் தண்­டிக்க நம்­ப­கர­மான செயல்­முறை அந்த திட்­ட­வட்­ட­மான வழி­மு­றை­க­ளுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்டு இலங்கை ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்ட நீதி­மன்­றத்தை போர்­க்குற்ற விசா­ர­ணைக்­காக நிறு­வு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தது.

அதற்­காக மேலும் இரு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு 2017ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இணக்கம் வெளியிடப்பட்டது.

எப்படியிருப்பினும் வெளிநாட்டு நீதிபதிகளை  நிராகரிப்பதாக இலங்கையின் சமகால அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.