மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர் ஜுன மகேந்­திரன்  நேற்று அதி­காலை 1.10 மணி ­ய­ளவில் சிங்­கப்பூர் நோக்கி சென்­றுள்ளார். நேற்றுமுன்தினம் பிணை முறிமோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக் குழுவில், சிரேஷ்ட மேல­திக சொலி­சிற்றர் ஜெனரால் தப்­புல டி லிவேரா, அர்ஜுன் மகேந்­தி­ர­னையும் அர்ஜுன் அலோ­சி­ய­சையும் ஆணைக் குழுவில் ஆஜர் செய்யும் வரை மக்கள் எதிர்ப்­பார்த்­தி­ருப்­ப­தாக கூறிய நிலை­யி­லேயே அவர் இவ்­வாறு சென்­றுள்ளார்.

 சிங்கப் பூர் நோக்கி பய­ண­மான சிங்­கப்பூர் விமான சேவைக்கு சொந்­த­மான எஸ்.கியூவ். 469 எனும் விமா­னத்தில் இவ்­வாறு சிங்கப் பூர் நோக்கி சென்­றுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

 நேற்று கொழும்பில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில், கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன, தமக்கு அர்­ஜுன மகேந்­திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக  தகவல் கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்தார். 

அர்­ஜுன மகேந்­திரன், அலோ­சியஸ் இந்த விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ரா­காமல் இருப்பின் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு விசா­ர­ணையை முழுமைப்படுத்த முடியாமல் போகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.