ஸ்பெயினில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேரலை நிகழ்சியின் பிற்பகுதியில் ஒரு பெண் தொகுப்பாளரின் ஆடையினை ஆண் தொகுப்பாளர் வெட்டிய சம்பவம் தொடர்பில் வீடியோ பதிவொன்று இணையத்தில் கசிந்துள்ளது.

நேரலை நிறைவடைந்த பின் சகஜமாக பெண் தொகுப்பாளருடன் உரையாடலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சக ஆண் தொகுப்பாளர் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலினை கொண்டு பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்ட தொடங்கியுள்ளார்.குறித்த பெண் தொகுப்பாளரின் ஆடை பல பாகங்களுக்கு ஆண் தொகுப்பாளரினால் வெட்டப்படும் காட்சி அடங்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொகுப்பாளி சினங்கொள்ளாது புன்னகையுடன், இது நகைச்சுவைக்கு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தொகுப்பாளர் ஏற்கனவே குறித்த ஆண் தொகுப்பாளரின் காற்சட்டையினை வெட்டியமையிற்கு பதிலடியாவே குறித்த ஆண் தொகுப்பாளரினால், பெண் தொகுப்பாள இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.