அப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வோட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் இன்று வெளியாகின்ற நிலையில் அப்பிள் நிறுவனம் அதன் 10 ஆண்டுகள் நிறைவையும் பூர்திசெய்கின்றது.

அந்தவகையில் உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதங்களில் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்தாண்டிற்கான புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் இன்று வெளியிடவுள்ளது.

முக்கியமாக இன்று அப்பிள் நிறுவனம் ஐ -போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ - போன் எக்ஸ் போன்ற புதிய ரக ஸ்மார்ட் போன் வகைகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 4K தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வோட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, 10 ஆண்டுகள் நிறைவை இவ்வாண்டு அப்பிள் நிறுவனம் கொண்டாடுகின்றமை முக்கிய அம்சமாகும்.