பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்றுள்ளது.

வங்கிக்கணக்குகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆவணங்கள் தொடர்பாக பரீட்சிப்பதற்காகவே ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அங்கு சென்றுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 5 தினங்களாக ஆஜராகியுள்ளார்.

பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்குவதற்கே அவர் இவ்வாறு 5 நாட்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தமை குறிப்பிடத்தக்கது.