நடிகைகள் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தற்போது மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் மகாநதி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் இவர்களுடன் நடிக்க நடிகை ஷாலினியும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த ஷாலின் நடிகர் அஜித்தின் மனைவியல்ல. தற்போது தெலுங்கு திரையுலகின் ட்ரெண்ட் செட்டை உருவாக்கிய அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்த நடிகை ஷாலினி.

இவர் இந்த படத்தில் சாவித்திரியின் திரையுலக தோழியான நடிகை ஜமுனாவின் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். படத்தில் துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்