வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி செல்லப்பட்ட 2 கிலோ 240 கிராம் கேரளா கஞ்சா பொதியினை பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த கரவெட்டி பகுதியை சேர்ந்த மனோகரன் வடிவரன் வயது -23 என்ற இளைஞரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதத்திற்குள் ஒன்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.