கொலம்­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனக்­கு­ரிய விசேட கண்­ணாடி  வாக­னத்தில்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணத்தை மேற்­கொண்ட போது, அவ­ரது தலை அந்த வாகன உள் மேற்­ப­ரப்பில் மோதி­யதால் அவ­ருக்கு  நெற்­றியில் காயம் ஏற்­பட்­டது.

கார்ட்­ட­ஜெனா நக­ரி­னூ­டாக அவ­ரது வாகனம் பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளை திடீ­ரென அந்த வாக­னத்தை சூழ்ந்து கொண்ட அபி­மா­னி­களால்  அதனை  நிறுத்த வேண்­டிய நிலை அதன் சார­திக்கு ஏற்­பட்­டது.

இதனால்  அந்த சாரதி  அந்த வாக னம் மக்கள் மீது மோது­வதைத் தடு க்க சடு­தி­யாக வேகத்­த­டுப்பை பிர­யோ­கிக்­கவும் நிலை தடு­மா­றிய பாப்­ப­ரசர் அந்த வாக­னத்தின் உட்­புற கண்­ணாடி  மேற்­ப­ரப்பில் தனது தலையை மோதிக்கொள்ள நேர்ந்­தது.

இதன்­போது அவ­ருக்கு கண்­ணு க்கு மேலான நெற்றிப் பகு­தியில் காயம் ஏற்­பட்டு  குருதி சிந்­தி­யது. அந்தக் குரு­தியின் துளிகள் அவ­ரது வெண்­ணிற ஆடை­யிலும்  சிவப்பு நிற கறை­யாக படிந்­தன. அவ­ருக்கு  ஏற்­பட்ட காயத்­துக்கு அவ­ரது வாக­னத்தில் வைத்தே உட­ன­டி­யாகப் பற்றுப் போடப்­பட்­டது.