சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்­களின் புதிய தர­வ­ரிசை பட்­டி­யலை வெளி­யிட்டுள்ளது.

இதில் இங்­கி­லாந்து வேகப்­பந்து வீச்­சாளர் ஜேம்ஸ் அண்­டர்சன் (896 புள்­ளிகள்) ஒரு இடம் முன்­னேறி மீண்டும் முத­லி­டத்தை பிடித்­துள்ளார். மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக லண்டன் லோர்ட்ஸில் நடை­பெற்ற கடைசி டெஸ்டில் அண்­டர்சன் மொத்தம் 9 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்­துள்­ளது. 

இதனால் முத­லி­டத்­தி­லி­ருந்த இந்­திய சுழற்­பந்து வீச்­சாளர் ரவீந்­திர ஜடேஜா (884 புள்­ளிகள்) 2ஆ-வது இடத்­துக்கு இறங்­கி­யுள்ளார். அஷ்வின் 852 புள்­ளி­க­ளுடன் 3ஆ-வது இடத்தில் இருக்­கிறார். நான்­கா­வது இடத்தில் இலங்கை அணியின் நட்­சத்­திர சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் நீடிக்­கிறார்.

துடுப்­பாட்ட வீரர்­களின் தர­வ­ரி­சையில் முதல் 7 இடங்­களில் மாற்றம் இல்லை. ஆஸி. தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முத­லி­டத்­திலும், இங்­கி­லாந்து தலைவர் ஜோ ரூட் 2ஆ-வது இடத்­திலும், நியூ­ஸி­லாந்து தலைவர் கனே வில்­லி­யம்சன் 3-ஆவது இடத்­திலும் உள்­ளனர். 

டெஸ்ட் அணி­களின் தர­வ­ரி­சையில் முதல் 5 இடங்­களில் முறையே இந்­தியா, தெ.ஆபிரிக்கா, இங்கி லாந்து, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன.