பாகிஸ்தான் மற்றும் ஐ.சி.சி.யின் உலக பதி­னொ­ருவர் அணி மோதும் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக ஐ.சி.சி.யின் உலக பதி­னொ­ருவர் அணி நேற்று பாகிஸ்தான் சென்­ற­டைந்­துள்­ளது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ஆ-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளை­யா­டி­யது. அப்­போது தீவி­ர­வா­திகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்­தனர். 6 பாது­காப்பு அதி­கா­ரிகள் மற்றும் இரண்டு பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர்.

இச்­சம்­ப­வத்தால் இலங்கை அணி உட­ன­டி­யாக பாகிஸ்தான் தொடரை இரத்து செய்துவிட்டு சொந்த நாடு திரும்­பி­யது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளை­யா­ட­வில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு சிம்­பாப்வே அணி மட்டும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யா­டி­யது.

தற்­போது பாகிஸ்­தானில் சர்­வ­தேச போட்­டிகள் தொடங்­கு­வ­தற்­கான காலம் கனிந்­துள்­ளது. ஐ.சி.சி. உலக பதி­னொ­ருவர் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்­மதம் தெரி­வித்­த­து. 

பாகிஸ்தான் –- ஐ.சி.சி. உலக பதி­னொ­ருவர் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்­ட­மிட்­டது.

அதன்­படி முதல் போட்டி இன்று தொடங்­கு­கி­றது. 2-ஆவது போட்டி நாளையும், 3ஆ-வது மற்றும் கடைசி போட்டி எதிர்­வரும் 15ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளன.

 மூன்று போட்­டி­களும் லாகூர் மைதா­னத்தில் நடக்­கின்­றன. இதற்­கான உலக லெவன் அணி ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த அணி கடந்த சில தினங்­க­ளாக டுபாயில் பயிற்சிகளை மேற்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்று  அதி­காலை 2 மணி­ய­ளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்­ற­டைந்­தனர். 

பாகிஸ்தான் சென்­ற­டைந்த அவர்கள் வர­லாறு காணாத பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் ஹோட்­ட­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

போட்டி நடை­பெறும் மைதா­னத்­திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்­ட­லுக்கும் வர­லாறு காணாத பாது­காப்பு அளிக்­கப்­ப­டு­கி­றது. பொலிஸார் மற்றும் துணை இரா­ணு­வத்­தினர் உட்­பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதே வேளை இலங்கை அணி ஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.