ஐக்­கி­ய ­நா­டுகள்  மனித உரிமை பேர­வையில்  36 ஆவது கூட்டத் தொடரின் இன்­றைய  அமர்­விலும் பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­ப­டுதல்  தொடர்­பாக ஆராயும் ஐ.நா.வின் விசேட செயற்­கு­ழுவின்   அறிக்கை தொடர்பில்  விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. 

நேற்­றைய தினமும் இது தொடர்பில் விவா­திக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இன்றைய தினமும்  விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதன்­போது இலங்கையில் காணா­மல்­போனோர் விவ­காரம் குறித்தும்  கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­துடன் கேள்­விகள் எழுப்­பப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இந்த  பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­ப­டுதல் தொடர்­பாக ஐ.நா. விசேட செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­தனர். 

இதன்­போது இலங்­கையில்  காணா­மல்­போனோர் தொடர்­பான  பல்­வேறு விட­யங்­களை ஆராய்ந்­தி­ருந்­தன. அந்த வகையில்   கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக  ஐ.நா.வின் இந்த விசேட செயற்­குழு தாம் பயணம் செய்த நாடு­களின்  காணா­மல்­போனோர் நிலைமை தொடர்­பாக  நீண்ட அறிக்­கை­யொன்றை 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. 

அந்த அறிக்கை தொடர்­பி­லேயே  இன்­றைய தினம் விவாதம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  குறித்த அறிக்­கையில் இலங்கை குறித்தும்  ஒரு சில விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தாம் 2015 ஆம் ஆண்டு இலங்கை விஜ­யத்தின் பின்னர் முன்­வைத்த பரிந்­து­ரைகள் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில்  விரை­வாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் எனவும்  காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் விரைவில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் எனவும்  இந்த செயற்­குழு அறிக்­கையில் குறிப்பிட்டிருந் தது. 

அந்தவகையிலேயே இன்றைய தினம் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.