அல் ஹுசைன் கடும் எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

12 Sep, 2017 | 09:21 AM
image

இலங்­கை­யா­னது  சர்­வ­தேச  மனி­தா­பி­மான சட்டம்,  மற்றும் சர்­வ­தேச  மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில்  நம்­ப­க­ர­மான  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் என்று  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் கடு­மை­யாக  எச்­ச­ரித்­துள்ளார். 

Image result for அல் ஹுசைன் virakesari

அத்­துடன் இது ஐ.நா. மனித உரிமை பேர­வையை தணிப்­ப­தற்­காக  அர­சாங்கம்  மேற்­கொள்ளும் முயற்­சி­யாக இருக்­கக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­ பட்ட மக்­களின் வேத­னையை   ஆராய்­வ­தாக அமை­ய­வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.   

 ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் ஆரம்­பித்­த­தை­ய­டுத்து முத­லா­வது அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  ஐ.நா.  மனித உரிமை ஆணை­யாளர்  செயிட் அல் ஹுசைன்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இதன்­போது 40 நாடு­களின் நிலைமை தொடர்­பாக  பேர­வையின்  அமர்வில்  உறுப்பு நாடு­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த    செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.   

அவர் நேற்­றைய ஜெனிவா அமர்வில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; 

இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர்  தொடர்­பான  அலு­வ­ல­கத்தை  உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன்.  அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும்  வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும்.  

விசே­ட­மாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள   காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும்.  பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை  உட­ன­டி­யாக  தீர்க்­க­வேண்டும்.  இந்த  வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக  தேங்­கிக்­கி­டக்­கின்­றன. 

அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் என்றும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும்   சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றேன். மேலும் வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் தாம­த­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­யினால்  பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர் என்­பது  தெளி­வா­கின்­றது.

அது­மட்­டு­மன்றி  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையை  முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அத­னூ­டாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி  அதன்   செயற்­பா­டு­களை ஒரு கால­நேர அட்­ட­வ­ணைக்குள் செயற்­ப­டுத்­த­வேண்டும் என்றும்   குறிப்­பி­டு­கின்றேன்.  

இதே­வேளை இந்த செயற்­பா­டு­க­ளா­னது  ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையை தணிப்பதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளாக வெளிக்காட்டப்படக்கூடாது.  மேலும் இலங்கையானது  சர்வதேச  மனிதாபிமான சட்டம்,  மற்றும் சர்வதேச  மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில்  நம்பகரமான  பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58