பண்டாரகம, கொதலாவல பிரதேசத்தில் உயிரிழந்த மணைவியின் நினைவை ஒட்டி மூன்று மாத கிரியை நாளன்று தனது 21 வயதுடைய மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தந்தையை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் நினைவாக மூன்று மாத நிறைவில் செய்யப்படும் புண்ணிய கிரியை நாளன்று இரவு சந்தேக நபர் அவரது மூத்த மகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் போது குறித்த இளம் பெண் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள உறவினர் வீட்டிற்குள் நுழைந்து அவர்களிடம் முறையிட்டுள்ளார்.

சினமடைந்த உறவினர்கள் அனைவரும் சேர்ந்து குறித்த சந்தேகநபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.குறித்த பெண் தன் தந்தையினால் தனக்கு நடந்த கொடுமையை  முறையிட்டதைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.