இலங்கை கடற்படையின் 229ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 339 வீரர்கள் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் பின்னர் வெளியேறிச் சென்றனர்.

இவ் அணிவகுப்பு நிகழ்விற்கு பொருட்கள்  மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரல் நிஹால் பிரணாந்து பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

 மகா சங்கத்தினர் உட்பட மத குருமார்கள் கடற்படை தலைமையகம் மற்றும் வடமத்திய கடற்படையின் சிரேஷ்ட, கணிஷ்ட, முப்படை  அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் வீரர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி காலத்தின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் 229ஆவது ஆட்சேர்ப்பில் ஆர்.ஆர்.யூ.சி ராஜபக்ஷ சிறந்த பயிற்சியாளருக்கான விருதையும், பீ.எம். டில்ஷான் சகல பாடங்களிலும் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதையும், ஜீ.ஆர்.பி.எம் பண்டார சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரருக்கான விருதையும், எச்.பி.டி.எல் பிரியதர்ஷன மற்றும் டி.ஜி.எஸ்.எம் ரத்னாயக விளையாட்டு போட்டியாளர்களுக்கான விருதையும் வென்றனர்.