சட்ட விரோதமாக சீனாவுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்த வெளிநாட்டு நாணயங்களுடன் சந்தே நபர் ஒருவர் கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.யு. 232 ரக விமானத்தின் மூலம் நேற்று மாலை 6.45 மணிக்கு சீனா நோக்கி செல்ல வருகை தந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

54 வயதுடைய இவர், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி 26 இலட்சத்து 52 ஆயிரம் ரூபா என சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

சந்தேக நபர் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு நாணயங்கள் அரசுடைமையாக்கப்பட்டன.