ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறுமி ஒருவரை மடியில் வைத்து கொஞ்சும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்து கொண்டுள்ளன.

பொலன்னறுவை கவுடுல்ல மிரிஸ்ஹேன பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் “குளத்தோடு கூடிய கிராமம்” வேலை திட்டத்தின் 50ஆவது நிகழ்ச்சி நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் “மைத்திரி தாத்தா” என அழைத்துக் கொண்டு  பொதுமக்கள் மத்தியிலிருந்து ஒரு சிறுமி மேடைக்கு ஓடிச்சென்றுள்ளார்.

மெய்ப்பாதுகாவலர்கள் தடுக்க முயற்சித்த போது ஜனாதிபதி சிறுமியை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியிடம் ஓடிச்சென்ற  சிறுமி நிகழ்ச்சி முடியும் வரை  ஜனாதிபதியின்   மடியில் துள்ளி விளையாண்டுள்ளார்.

ஜனாதிபதியும் சிறுமியும் செல்லக் கலந்துரையாடலுடனும் சிரிப்புடனும் நேரத்தை கழித்துள்ளனர்.