வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் இராணுவச்சீருடை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9 ஆம் ஒழுங்கையில் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினையுடன் இராணுவச்சீருடை  இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இராணுவ சீருடையை மீட்டுள்ளனர்.

குறித்த இராணுவ  சீருடை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சம்பவம் குறித்து மேலலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.