இலங்கை அணியின் முன்னாள் அணித் தலை­வரும் நட்­சத்­திர வீர­ரு­மான குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்­திய கிரிக்கெட் சபை விசேட அழைப்­பொன்றை விடுத்­துள்­ளது.

இந்­திய கிரிக்கெட் சபை மற்றும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் முன்னாள் தலை­வரும், கொல்­கத்தா கிரிக்கெட் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான ஜக்­மோகன் டால்­மி­யாவின் நினை­வு­தின நிகழ்வில் கலந்­து­கொண்டு விசேட உரை­யொன்றை நிகழ்த்­து­வ­தற்கே இந்த விசேட அழைப்பு சங்­கக்­கா­ர­வுக்கு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும், கொல்­கத்தா கிரிக்கெட் சங்­கத்தின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான சௌரவ் கங்­குலி இவ் அழைப்பை விடுத்­துள்­ள­துடன், இதற்கு சங்­கக்­கார சாத­க­மான பதிலை வழங்கி சம்­மதம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இந்­திய கிரிக்­கெட்டின் வளர்ச்­சிக்­காக பாரிய சேவையை வழங்கிய ஜக்மோகன் டால்மியா, கடந்த 2015ஆம் ஆண்டு தனது 75ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.