'ஒரு நிமிடம் பொறுங்கள் வாழ்க்கை மாறும்'

Published By: Robert

11 Sep, 2017 | 09:51 AM
image

இலங்­கையில் நாளொன்­றுக்கு எட்டு பேர் வீதம் தற்­கொலை செய்து கொள்­வ­தா­கவும் இவ்­வ­ரு­டத்தின் முதல் அரை­யாண்டு காலப்­ப­கு­தியில் மாத்­திரம் சுமார் 1500 க்கு மேற்­பட்டோர் தற்­கொலை செய்து கொண்டு உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின் தேசிய தற்­கொலை தடுப்பு பிரிவு தெரி­வித்­துள்­ளது. 

ஐக்­கிய நாடு­களின் உலக சுகா­தார ஸ்தாப­னத்­தினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட 15 ஆவது சர்­வ­தேச தற்­கொலை எதிர்ப்பு தினம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு நிமிடம் பொறுங்கள் வாழ்க்கை மாறும் எனும்தொனிப்­பொ­ருளில் அனுஷ்டிக்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்வில் இலங்­கையில் தற்­கொ­லை­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் உள­வியல் வைத்­திய நிபுணர் சந்­திர மால டி சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் நாளொன்­றுக்கு எட்டு பேர் வீதம் தற்­கொலை செய்து கொள்­வ­தா­கவும் இவ்­வ­ரு­டத்தின் முதல் அரை­யாண்டு காலப்­ப­கு­தியில் மாத்­திரம் சுமார் 1500 க்கு மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலி­ஸாரின் அறிக்­கையின் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் சர்­வ­தேச ரீதியில் வரு­ட­மொன்றுக்கு 8 இலட்சம் பேர் வீதம் உயி­ரி­ழக்­கின்­றனர். அவர்­களில் பலர் 25 முறைக­ளுக்கும் மேல் தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ள­தா­கவும் ஆய்­வொன்றில் தெரி­விக்கின்றது. இலங்­கையின் தற்­கொ­லைகள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் ஆய்­வ­றிக்­கையின் அடிப்­ப­டையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் 2389 ஆண்­களும், 669 பெண்­களும் தற்­கொலை செய்து  கொண்­டுள்­ளனர். அத்­துடன் 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 2339 ஆண்­களும், 686 பெண்­களும் தற்­கொலை செய்­து­ கொண்­டுள்ள நிலையில் இவ்­வ­ரு­டத்தின் முதல் அரை­யாண்­டு ­கா­லப்­ப­கு­தியில் மாத்­திரம் 1275 ஆண்­களும் 322 பெண்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

 இலங்­கையில் தற்­கொ­லை­களை தடுப்­ப­தற்­கான தேசிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு ­வ­ரு­கின்­றன. அத­ன­டிப்­ப­டையில் அவர்­களை பாது­காப்­ப­தற்கு 25 யுவன்­பி­யச தேசிய அமைப்­புக்கள் இயங்­கு­கின்­றன. 

இந்­நி­று­வ­னங்கள் மூலம் தற்­கொலை செய்து கொள்ளும் எண்­ணத்தை மாற்றி அவர்­களின் மன அழுத்­தத்தை குறைத்தல், நேர்மறை ­வி­ட­யங்­களை சிந்­திப்­ப­தற்கு இட­ம­ளித்தல், இளை­ஞர்­களின் திறன் அபிவி­ருத்தி உள்­ளிட்ட பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு தற்­கொ­லை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்றார்.

இதே­வேளை தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்­டுச் ­ச­பையின் தலைவர் ரவிந்­திர பெர்னாண்டோ தெரி­விக்­கையில்,

கடந்த காலங்­களை விட இலங்­கையில் தற்­போது தற்­கொலை செய்­து ­கொள்­வோரின் வீதம் குறை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக கடந்த 1995 ஆம் ஆண்­டு ­கா­லப்­ப­கு­தியில் வரு­ட­ மொன்­றுக்கு 8500 பேர் வரையில் தற்­கொ­லை­களால் மர­ணித்­தனர். எனினும் 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்­டு ­கா­லப்­ப­கு­திக்குள் 3025 வரையில் பதிவாகியிருக்கின்றது.

தற்போது பாதிக்கப்படுவோர்களுக்கு போதைப்பொருள் கட்டுப்பாடு, முரண்பாடுகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பி லான விழிப்புணர்வு திட்டங்கள் இளைஞர்களுக்கா திறன்விருத்தி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04