சமஷ்டி முறைமை என்­பது பிரி­வி­னை­யே­யாகும். இது  தொடர்பில் எம்­மிடம்  மாற்­றுக்­க­ருத்­துக்கு  இட­மில்லை என்று  அஸ்­கி­ரிய பீடத்தைச் சேர்ந்த  தேரர்கள்   வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம்  மிகவும் திட்­ட­வட்­ட­மாக  நேற்று  தெரி­வித்­துள்­ளனர்.  

இதே­வேளை  இந்த சந்­திப்­பின்­போது மேலா­திக்க நிலைப்­பாட்டில் இருந்தே  தேரர்கள் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­த­தாக வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். சிலர் நல்­லெண்­ணத்­துடன் 

செயற்­பட்ட போதிலும் சில­ரது மனங்­களில்   விரோ­தங்கள் மேலோங்­கி­யுள்­ளன எனவும் அஸ்­கி­ரிய பீடத்­து­ட­னான சந்­திப்பின் பின்னர் வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்  குறிப்­பிட்டார். 

வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன்  நேற்று  அஸ்­கி­ரிய  பீடத்தின் உப பீடா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இவ்­வாறு கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.    இந்த சந்­திப்பில் அஸ்­கி­ரிய  பீடத்தின்    தேரர்கள் அனை­வரும்  கலந்து கொண்­டனர். இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு  அதி­கார பர­வ­லாக்கல் மற்றும் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு குறித்தும் தேரர்கள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.  

இதன்­போது   சமஷ்டி  தீர்வின் அவ­சியம்   தொடர்பில்   வடக்கு முதல்வர் தேரர்­க­ளுக்கு  விளக்­க­ம­ளித்­த­போதும்  தேரர்கள்  அவற்றை ஏற்­றுக்­கொள்ளும் மனப்­பான்­மையில் இருக்­க­வில்லை    என  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

இந்­நி­லையில் இந்த சந்­திப்பு தொடர்பில்  வடக்கு முதல்வர் தெரி­விக்­கையில், 

கண்டி அஸ்­கி­ரிய தேரர்­களை நல்­லெண்ண அடிப்­ப­டையில் நாம் சந்­தித்­தி­ருந்தோம். நேற்று (நேற்று முன்­தினம்) நாம் மல்­வத்து மாநா­யக்க தேரரை சந்­தித்தோம். அவர் என்­னுடன் தனிப்­பட்ட பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­தி­ருந்தார். மிகவும் புரிந்­து­ணர்வு ரீதியில் நல்­ல­தொரு பேச்­சு­வார்த்­தை­யாக இது அமைந்­தது. ஆனால் இன்று ( நேற்று ) அஸ்­கி­ரிய பீட தேர­ருடன் சந்­திப்­பா­னது சற்று மாறு­பட்ட சங்­க­டத்­துக்­கு­றிய வகையில் அமைந்­தது. குறிப்­பாக அவ­ருடன் நான் தனிப்­பட்ட ரீதியில் கருத்­துக்­களை பகி­ரவே விரும்­பினேன். ஆனால் இந்த சந்­திப்பில் மாநா­யக்க தேர­ருடன் மேலும்  12 தேரர்­களும்  கலந்­து­கொண்­டனர். அவர்­களின் பிரித் பிரார்த்­த­னை­களை செய்த  பின்­னரே என்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தனர். 

 இந்த சந்­திப்­பின்­போது  ஏற்­க­னவே அவர்கள் இருந்த நிலைப்­பாட்டில் இருந்தே என்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தார்­களே தவிர எனது நிலைப்­பாட்டை முழு­மை­யாக செவி­ம­டுக்கும் நோக்கம் இருக்­க­வில்லை என நான் உணர்ந்தேன் . எனினும் இவர்கள் என்ன நிலைப்­பாட்டில் இருந்து என்­னுடன் பேசி­னார்கள் என்­பதை என்னால் உணர்ந்­து­கொள்ள முடியும். ஆனால்  எனது தரப்பின் கார­ணி­களை முன்­வைத்தேன். குறிப்­பாக எமது உரி­மை­களை நாம் பெற்­றுக்­கொள்ள போரா­டு­வது குறித்தும், எம்­மிடம்    பிரி­வி­னை­வாதம் , மத­வாதம், இன­வாத கொள்­கைகள் இல்லை என்­ப­தையும்   கூறினேன். மேலும் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வு மட்­டுமே சாத­க­மாக அமையும். அர­சியல் தீர்வு குறித்து நாம் மிகவும் ஆழ­மான எதிர்­பார்ப்பை கொண்­டுள்ளோம் என்­ப­தையும்   தெரி­வித்தோம். 

மேலும் நாட்டில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக  இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்­களே பெரும்­பான்­மை­யான மக்­க­ளாக உள்­ளனர். எனவே எமது சுய கௌரவம், அடை­யா­ளத்தை பாது­காக்க நாம் முயற்­சிக்­கின்றோம். சிங்­கள மேலா­திக்கம் எம்­மத்­தியில் திணிக்­கப்­பட கூடாது என்­பதை நான் தெரி­வித்தேன். அதேபோல் அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் இவர்கள் மத்­தியில் மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன. நாடு பிரியும் வகையில் அல்­லது ஒரு­சி­ல­ரது தேவைக்கு அமைய புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். மாறு­பட்ட கருத்தில் இவர்கள்  இருப்­பதால்    எமது தரப்பு நியா­யங்­களை நாம் முன்­வைக்க கிடைத்­தது. 

எனினும் இவர்கள் கூறும் அனைத்­தையும் எம்மால் ஏற்­று­கொள்ள முடி­யாது. ஒரு­சில விட­யங்­களில் எம்மால் இணக்கம் தெரி­விக்க முடியும்.  ஆனால் வடக்கு மற்றும் தமி­ழர்கள் விட­யத்­திலும் சமஷ்டி விட­யத்­திலும் இவர்­களின் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும்.   இந்த பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டமையை   மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றுகொள்ள இவர்களின் தலையீடுகள் மற்றும் நடுநிலைத்தன்மை  கிடைக்கும்  என நம்புகின்றோம்.  நல்ல மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன  என்றார்.