இர்மா சூறாவளியில் சிக்குண்ட புதுமண தம்பதிகள் ; நரகத்தில் ஒரு தேனிலவு

10 Sep, 2017 | 07:19 PM
image

கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவுக்கு நகர்ந்துள்ளதோடு, இதுவரை  20 பேர் அதன் சீற்றத்திற்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கியூபாவுக்கு தேனிலவு சென்றிருந்த தம்பதியினர் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிதாக திருமணம் முடித்த சாம் லிவர்- செல்ஸியா என்ற தம்பதியினர் தேனிலவுக்காக கியூபா சென்றுள்ளனர்.2500 பயணிகளுடன் கியூபாவில் உள்ள கயோ கொகொ சொகுசு விடுதியிலிருந்து, வரடெரொ நகரத்துக்கு 8 மணி நேரம் பயணித்து சென்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

சாம் லிவர் கூறியதாவது,எங்கள் தேனிலவு நாங்கள் நரகத்திற்கு சென்றது போல உள்ளது.அதிகாரிகள் எங்களை 11 பஸ்களில் அழைத்து வந்தனர். எட்டு மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் பயணித்து வாராதேரோவை அடைந்தோம்.

நானும் என் மனைவியும் ஒரு விளையாட்டு அறையில் மற்ற சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து தங்க வைக்கப்பட்டோம்.

எம்முடன் வந்த சிலரை புதன்கிழமையே இங்கிருந்து குறித்த நிறுவனம் வெளியேற்றி இருக்கிறது. அப்படி வெளியேறியவர்களில், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய அவர்களது ஊழியர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இது ஒரு இழிவான, வெட்ககேடான செயல் ஆகும், மக்களை வெளியேற்றுவதில் இந்த சுற்றுலா நிறுவனம் பராபட்சம் பார்த்து பெரும் தவறு செய்கிறது.நாங்கள் இப்போது வரதெரோவில் சிக்கி இருக்கிறோம், ஒரு கெட்ட கனவு போல இதிலிருந்து மீள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35