பழம்பெரும் நடிகை குமாரி ராதா என அழைக்கப்படும் பி.வி ராதா இன்று பெங்களூரூவில் காலமானார்.

1964 ஆம் ஆண்டில் நவகோடி நாராயணா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர். இவர் குமாரி ராதா என்ற பெயரில் தமிழில் தாழம்பூ என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து யார் நீ, காதலித்தால் போதுமா?, சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சிஐடி சங்கர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இழப்பு தென்னிந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அவருடைய குடும்பத்தார்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : சென்னை அலுவலகம்