தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் தனது கட்டுப்பாட்டை மீறி குறித்த மோட்டர் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்களில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலாவக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.