தாய்மை பேற்றை அடை­வ­தற்கே எத்­தனை சிர­மங்கள் தாண்­ட­வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு பல துன்­பங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வயிற்றில் சிசுவை தாங்கி குழந்­தையை பெற்­றெ­டுக்கும் நாள் ஒரு இனிய நாள். இது ஒரு வாழ்வின் மறக்க முடி­யாத இனிய அனு­பவம். இவ்­வாறு மகிழ்ச்­சி­யான வேளையில் பிறந்த குழந்­தை­யா­னது தாயில் பால்­கு­டிக்க தொடங்­கு­வது குழந்­தையின் முக்­கிய செயற்­பா­டாக ஆரம்­பிக்­கின்­றது. நாம் நினைப்­பது போல் தாய்ப் பால் கொடுப்­பதும் குழந்தை பால் குடிப்­பதும் ஒரு இல­கு­வான விடயம் கிடை­யாது. இதிலே தான் சிர­மங்கள் ஆரம்­பிக்­கின்­றன. அதா­வது குழந்தை சரி­யாக பால் குடிக்கத் தெரி­யாது அழு­வதும் தாய் சரி­யாக பால் கொடுக்க தெரி­யாது அவ­திப்­ப­டு­வதும் மற்றும் சில தாய் மாரில் தாய்பால் வரத்­தொ­டங்­காமல் திகைப்­பதும் நாளாந்தம் காணும் நிகழ்­வாக உள்­ளது. 

இவ்­வாறு தாய்க்கும் குழந்­தைக்கும் இடையில் பாலுக்­காக தடு­மாற்­றமும் போராட்­டமும் நடக்கும் வேளையில் தாயும், குடும்­பத்­தி­னரும் குழந்தை பசியில் அழு­கின்­றதே மாப்பால் கரைத்து சரி கொடுங்­களே என்று தான் கேட்­பார்கள். ஆனால் இன்று மருத்­து­வத்தில் உல­க­ளா­விய ரீதியில் ஓங்கி ஒளிப்­பது என்­ன­வென்றால் தாய்ப்­பாலே சிறந்த பால். குழந்­தை­க­ளுக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். வேறு எந்த செயற்கை பாலையும் கொடுக்­கா­தீர்கள் என்­ப­தே­யாகும். இவ்­வாறு வைத்­தியத் துறையில் தாய்ப்பால் முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால் நடை­மு­றையில் இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது தாயும் குழந்­தையும் ஆரம்­பத்தில் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். பிர­ச­வத்தை அடுத்து வரும் முதல் நாட்­களில் தாய்ப்பால் மிகவும் குறை­வா­கத்தான் சுரக்­கின்­றது. பின்னர் போகப்­போ­கத்தான் அளவு கூடும். ஆனால் ஆரம்ப நாட்­களில் பால்­போ­தாது என நினைத்து தாய்ப்பால் முலையில் இருந்து எடுத்­துதான் கொடுக்க வேண்­டி­வரும். இதன்­போது முலைக்­காம்பு பகு­திகள் வலி எடுப்­பதும் புண்­ணா­கு­வதும் வெடிப்­பதும் என சில சிக்­கல்கள் வரத்தான் செய்­கின்­றன. அத்­துடன் தாய்ப்பால் போதாது குழந்­தையின் உடல் நிறை குறை­வ­டைய தொடங்­கு­வதும் குழந்தை மஞ்சள் நிற­மா­வதும் குழந்­தைக்கு காய்ச்சல் வரு­வதும் ஏற்­ப­டக்­கூடும். இவற்­றை­யெல்லாம் அனு­ப­விக்கும் தாய்க்கு மனச்­சோர்வு ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சிர­மப்­படும் போது சில வேளை­களில் தாய்ப்பால் கொடுப்­ப­துடன் மேல­தி­க­மாக மாப்பால் கரைத்து போத்தல் மூலம் பருக்க வேண்டி வரு­கின்­றது. இவ்­வாறு குழந்­தைக்கு பால் கொடுப்­பது என்­பது எமக்கு ஒரு சிறிய விடயம் எனக்­க­ரு­தி­னாலும் அதில் வரக்­கூ­டிய சவால்கள் எத்­த­னை­யென்று காண்கின்றனர். இவ்­வாறு தாய்ப்பால் கொடுப்­பது என்­பது ஒரு பயிற்சி பெற­வேண்­டிய விட­ய­மாக உள்­ளது. அதா­வது குழந்தை பிர­ச­வித்த சில நிமி­டங்­க­ளி­லேயே தாய்ப்பால் கொடுத்­தலை ஆரம்­பித்த பின்னர் சரி­யான முறையில் குழந்­தையை தூக்கி அணைத்து குழந்­தையின் வாயினுள் முலைக்­காம்பை சரி­யாக வைத்து பால்­கு­டிக்க தூண்­டு­வது என்­பது ஒரு கலை­யாகும். இதனை பொறு­மை­யாக போதிய நேரம் செய்ய வேண்டும். இதற்கு தகுந்த தாதி­மாரின் கண்­கா­ணிப்பு தேவைப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சரி­யான முறையை பழகி சரி­யான முறையில் பால் கொடுக்கத் தொடங்க ஒரு சில நாட்கள் எடுக்கும் என்­ப­தனை யாரும் மறுக்க முடி­யாது. இவ்­வா­றான ஒரு சில நாட்­க­ளிலும் இவற்றை கையாளும் விதம் முக்­கி­ய­மா­னது. ஏனெனில் குழந்­தையின் ஆரோக்­கியம் பாதிக்­கா­த­வாறு இந்த ஆரம்ப நாட்­களில் நாம் பார்த்து கொள்ள வேண்டும். அதா­வது குழந்­தையின் குரு­தியில் குளுக்­கோசின் அளவை குறை­யவும் விடக்­கூ­டாது. அத்­துடன் உடல் நிறையில் பாரிய வீழ்ச்­சி­யையும் அடைய விடக்­கூ­டாது. மேலும் குழந்தை மஞ்சள் நிற­மா­கா­மலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்­வாறு ஆரோக்­கி­யத்தை உறுதி செய்து கொண்டு குழந்தை தொடர்ந்தும் பால் வரு­கி­றதோ இல்­லையோ தாயின் முலையில் குடிக்கும் போது தாயின் ஹோர்­மோன்கள் தூண்­டப்­பட்டு ஒரு சில நாட்­களில் போதிய பால் சுரக்கத் தொடங்கும். 

ஆனால் பல பெண்கள் ஒரு சில ஆரம்ப நாட்­களில் ஏற்­படும் இந்த தற்­கா­லிக சிர­மங்­களை புரி­யாமல் மனச்­சோர்வும் வெறுப்பும் அடைந்து குழந்­தைக்கு செயற்­கை­யான மாப்­பாலை கரைத்து போத்தல் மூலம் பருக்கத் தொடங்கி விடு­வார்கள். இவ்­வாறு போத்தல் பாலை இல­கு­வாக குடித்துப் பழ­கிய குழந்­தையும் சில நாட்­களின் பின் தாயின் முலையில் பாலை குடிக்கத் தயங்­கு­கின்­றது. அதா­வது இல­கு­வான வழியை கண்ட குழந்தை முயற்­சியால் உறிஞ்சி எடுக்க வேண்­டிய தாய்ப்­பாலை குடிக்க மறுக்­கின்­றது. இதன் விளை­வாக நாம் குழந்­தைக்கு தொடர்ச்­சி­யாக மாப்­பாலை கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது. 

இது ஒரு வேத­னைக்­கு­ரிய விட­ய­மாக உள்­ளது. அதா­வது தாய்ப்பால் தான் சிறந்­தது. தாய்ப்­பாலில் தான் குழந்­தைக்கு தேவை­யான சரி­யான போஷாக்கு உண­வுகள் இருப்­ப­துடன், நோய் எதிர்ப்பு சக்­தியும் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. அது மட்டுமல்லாமல் சிறந்த புத்தி கூர்மையும் மூளை வளர்ச்சியும் உருவாகும். அத்துடன் தாய்க்கும் மார்பக புற்றுநோய்கள் மற்றும் சூலகப் புற்றுநோய்கள், கர்ப்பப்பை புற்றுநோய்கள் எனப் பல நோய்கள் வராமலும் தாய்ப்பால் அதிக காலம் கொடுப்பதன் மூலம் நன்மை ஏற்படுகின்றது. எனவேதான் உலகளாவிய ரீதியில் தாய்ப்பாலின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.