கூட்டு எதிர்க்கட்சி தாமரைமொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

Published By: Robert

10 Sep, 2017 | 09:11 AM
image

கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன் றத் தேர்­தலில் தாமரை மொட்டு சின்­னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்­ன­ணி­யூ­டாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதன்­போதே குறித்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இலக்­காகக் கொண்டு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. எனவே பிர­தேச மட்­டத்தில் அக்­கட்­சியைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

மேலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கூட்டு எதிர்க்­கட்­சி­யூ­டாகக் கள­மி­றக்­க­வுள்ள அபேட்­ச­கர்­களில் அதி­க­ள­வானோர் ஏற்­க­னவே தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் சமுர்தி மற்றும்  விவ­சா­யத்­துறை அதி­கா­ரிகள் ஏரா­ள­மானோர் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

எனினும் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக சமுர்த்தி மற்றும் விவ­சா­யத்­துறை அதி­கா­ரிகள் தேர்­தலில் போட்­டி­யி­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.  ஆகவே அது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உட்­பட கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்போது உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரதமரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04