(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பில் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது மத்தள விமான நிலைய விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கூட்டு முயற்சியில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்  மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் பல்வேறு இழுபறி நிலைகள் ஏற்பட்டுள்ளது. இலங்கை தரப்பில் சாதகமான வெளிப்பாடுகள் மத்தள விமான நிலையத்தை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் வெளிப்படவில்லை.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சர் இந்திய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனான சந்திப்பின் போது கலந்துரையடினார்.

இந்நிலையில் இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அந்நாட்டு தலைவர்கரளை சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடி திலக் மாரப்பன இலங்கையின் நிலைப்பாடடை தெளிவுப்படுத்தியுள்ளார். 

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக்  மாரப்பன இன்று  இந்திய வெளிவிவகார அமைச்சர்  சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்துல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.  

அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்  பிரசாத் காரியவசம், தெற்காசிய மற்றம் சார்க் பிரிவுக்கான வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.ஏ.கே.  கிரிஹகம  ஆகியோரும் வெளிவிவகார  இந்தியா சென்றுள்ளனர்.