மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இதேவேளை, உன்னிச்சைக்குளத்தினுள்ளும் அதனுடன் தொடர்புடைய நீர் நிலைகளினுள்ளும் இவ்வாறாக கால்நடைகள் உயிரிழப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உன்னிச்சைக்குளத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் பெறப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின்  குடிநீர்த் தேவை உன்னிச்சைக்குளத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்ற நிலையில் குளத்தின் நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் நிலையில், கால்நடைகளின் உயிரிழப்பானது குடிநீரிலும் தாக்கத்தை செலுத்துமா என்பதற்கு அப்பால் அவ்வாறாக உயிரிழந்த நிலையில் காணப்படும் மாடுகளை நீர் நிலையில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் உரிய அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.