முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு எதி­ரான தீர்ப்பைக் கேட்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வியப்­ப­டைந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லாக நாம் நேற்று  (நேற்று முன்­தினம்) பிர­மதர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் அமையப் பெற்­றுள்­ள­ அ­வ­ரது அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். 

அதன்­போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்­ட­மூலத்­தி­னூ­டாக சமுர்த்தி மற்றும் விவ­சா­யத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதை தெளி­வு­ப­டுத்­தினோம். மேலும் அது சம்­பந்­த­மாக பரி­சீ­லிக்­கு­மாறு பிர­த­ம­ரிடம் வேண்­டிக்­கொண்டோம்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு எதி­ரான தீர்ப்பு சம்­பந்­த­மாக மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை குறித்த தீர்ப்பை கேள்விப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆச்சரியமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.