நீர்க்கட்டணத்தில் அதிகரிப்புச் செய்வதை தவிர்க்க முடியாதாம் : ஹக்கீம்

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 02:35 PM
image

நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்ய வேண்­டிய நிலைமை தோன்­றி­யுள்­ளது.  அதனால் சமுர்த்தி பெறு­கின்­ற­வர்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­ய­வுள்­ள­­தாக நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு செய்ய வேண்­டிய ஒரு சூழல் தற்­போது தோன்­றி­யுள்­ளது. காரணம் சில பகு­தி­களில் மழை­வீழ்ச்சி அதி­க­மாக பதி­வா­னாலும்  வடக்கின் சில   பகு­தி­களில் வரட்சி நீடித்து வரு­கின்­றது.

அவ்­வா­றான நிலை­மையில் தற்­போது நீர் சுத்­தி­க­ரிப்பு செல­வு­களும் அதி­க­ரித்­துள்­ளன. இருப்­பினும் அதனால் நீர்க்கட்­ட­ணங்­களில் அதி­க­ரிப்­புக்கள் எதுவும் தற்­போ­து­வ­ரையில் செய்­யப்­ப­ட­வில்லை. 

தற்­கா­லத்­திலும் கூட 80 வீத­மா­ன­வர்கள் பாது­காப்­பான நீர் நிலை­க­ளி­லி­ருந்து நீரை பெற்­றுக்­கொண்­டாலும் 40 வீதத்­தினர் மாத்­தி­ரமே குழாய் நீரை பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். இதனை 2020 ஆம் ஆண்­ட­ளவில் 60 வீத­மாக அதி­க­ரிக்க பெரும் பிர­யத்­த­னங்­களை அமைச்சு மேற்­கொண்டு வரு­கின்­றது.

அந்த செயற்­பாட்­டினை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க தற்­போது எமக்கு முத­லீ­டுகள் அவ­சி­ய­மா­கின்­றது. காரணம் நாம் நீரை குழாய் வழி­யாக அனுப்பும் போது இடையில் வெடிப்­புக்­களோ அல்­லது தடை­களோ ஏற்­படும் பட்­சத்தில் அவற்றை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு பெரும் நெருக்­க­டிகள் எமக்கு ஏற்­படும். அதற்­கான செலவும் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றான நிலை­யிலும்  கூட 1000 லீற்றர் நீரை வெறு­மனே 12 ரூபாய்க்கு மாத்­தி­ரமே வழங்­கு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கின்­ற­போது அர­சாங்­கத்தின் நீர் விநி­யோகத்திற்கான செயற்­பாடு மிகவும் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் அதனை முகா­மைத்­துவம் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.

அதன் காரணமாக தற்போது நீர் கட்டணத்தில் சிறு மாற்றம் செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் சமுர்த்தி பெறும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09