துமிந்த சில்வா, வாஸ், சரண ஆகியோரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்த லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 10:09 AM
image

சில் துணி விநி­யோக நட­வ­டிக்கை தொடர்பில் அரச நிறு­வ­ன­மான தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்­லியன் ரூபாவை பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்காணப்­பட்டு 3 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி செயலாளர் லலித் வீர­துங்­கவும், தொலை தொடர்­புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்­டவும் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். 

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி கிஹான் குல­துங்­கவின் தீர்ப்பை அடுத்து நேற்று முன்தினம் சிறைச்­சா­லைக்கு அழைத்து செல்­லப்­பட்ட மேற்­படி இரு­வரும், நேற்று பகல் வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக  வெலிக்­கடை சிறைச்­சா­லையின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

V 18069 எனும் சிறை இலக்­கத்தைக் கொண்ட  லலித் வீர­துங்க சிறை வைத்­தி­ய­சா­லையின் மூன்­றா­வது வார்ட்டில் 7402  ஆம் இலக்க நோயாளர் ஓய்­வெ­டுக்கும் கட்­டி­லிலும், V 18068 ஆம் இலக்க  சிறை கைதி எண்னைக் கொண்ட அனுஷ பெல்­பிட்ட 7401 ஆம் இலக்க ஓய்­வெ­டுக்கும் கட்­டி­லிலும் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லை தக­வல்கள் தெரி­வித்­தன.

லலித் வீர­துங்­கவும், அனுஷ பெல்­பிட்­டவும் அவர்­க­ளுக்கு உள்ள நீரி­ழிவு நோயின் தாக்கம் கார­ண­மாக இவ்­வாறு சிறைச்சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சாலை பதி­வேட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த வார்ட்டில் ஏற்­க­னவே குற்றச் செயல்கள் தொடர்பில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர். துமிந்த சில்வா மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரண குணவர்தன உள்ளிட்ட பிரபலங்களும் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32