நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற ஆட்­சியைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தது போதும். எனவே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக களத்தில் இறங்க வேண்­டிய சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தைப்­போன்ற யுக மாற்­றத்­திற்கு நாம் தயா­ரா­கி­விட்டோம். அப்­ப­ய­ணத்தில் சகல பெளத்த தேரர்­களும் இணைந்­து ­கொள்ள வேண்டும்.

அப்­ப­ய­ணத்தில் குறுக்­கிடும் சகல சவால்­க­ளையும் முகம்­கொ­டுப்­ப­தற்கு தாம் தயா­ரா­கி­விட்­ட­தாக முத்­தட்­டுவே ஆனந்த தேரர் தெரி­வித்தார்.

தாய்­நாட்டை பாது­காக்கும் அமைப்பு ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள அப­ய­ராம விகா­ரையில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­க­டியில்,

நல்­லாட்சி அர­சாங்கம் தேர்­த­லுக்கு முன்னர் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. மேலும் அமரர் மாது­லு­வாபே சோபித தேரரின் பூத­வு­ட­லுக்கு முன்னால் நின்­று­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய உறு­தி­மொ­ழியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அத்­துடன் தற்­போது நாட்டில் எப்­போ­து­மில்­லா­த­வாறு பெளத்த மதத்­திற்கு எதி­ரான சதி முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அச்­சதி முயற்­சிகள் சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் ஆரம்­பத்தில் 48 தேரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தது. அவ்­வா­றான செயற்­பாடு இதற்கு முன்னர் இடம்­பெ­ற­வில்லை. மேலும் தற்­போது அமைச்சர் பீல்ட்­மாஷல் சரத்­பொன்­சேகா போன்றோர் தேரர்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இதே­வேைள நாட்டில் மேற்­கொள்ள வேண்­டிய பல விட­யங்கள் இருக்­கும்­போது அர­சாங்கம் அதனைக் கைவிட்டு விட்டு நாட்டு வளங்களை விற்­பனை செய்­வ­துடன் அவ­சி­ய­மற்ற அர­சியல் அமைப்பைக் கொண்டு வந்து நாட்டை இரண்­டாகப் பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. ஆகவே இது தொடர்பில் சக­லரும் விழித்து உரிய நட­வ­டிக்­கையில் இறங்க வேண்டும். 

மேலும் இலங்­கையின் தனித்­து­வத்­திற்கு பாதகம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனைந்த ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் தேரர்கள் அதற்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழுந்து நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். அதனை வர­லாறு நெடு­கிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது. எனவே நல்­ல­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்து போதும். பணியில் இறங்க வேண்­டிய தருணம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. 

எனவே அர­சாங்­கத்தின் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேரர்­க­ளா­கிய நாம் தயா­ராகி விட்டோம். இப்­ப­ணியில் சகல தேரர்­களும் இணைந்­து­கொள்­ள­வேண்டும். இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தாய் நாட்டைப் பாது­காக்கும் அமைப்பு பாதை­யாத்­திரை ஒன்றை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

எதிர்­வரும் 27 ஆம் திகதி தெவி­நு­வர ரஜ­மகா விகா­ரையில் பெளத்த வழி­பா­டு­களை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­செய்­துள்ளோம். அத்­துடன் எதிர்­வரும் 28 ஆம் திகதி அங்­கி­ருந்து பாத யாத்­தி­ரையை ஆரம்­பிக்­க­வுள்ளோம். பாத­யாத்­தி­ரை­யின்­போது சில இடங்­களில் கூட்­டங்­க­ளையும் நடத்­து­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம்.

எதிர்­வரும் 30 ஆம் திகதி பேலியகொடயிலிருந்து தொடரும் பாத யாத்திரை களனி விகாரை வரை செல்வதுடன் அங்கு சமய அனுஷ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுசெய்துள்ளோம்.

அது தவிர எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாநாடொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.