ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் அமெ­ரிக்கா செல்­கின்றார்.   

ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது  பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் நியூயோர்க் செல்­கின்­றனர். 

இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  உள்­ளிட்ட  அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை  நடத்­த­வுள்ளார்.  ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் எதிர்­வரும் 12 ஆம்  திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தியே பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார்.  

அதே­போன்று  இந்த மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்ள  ஜெர்மன் அதிபர்  ஏஞ்­சலா மேர்க்கல், இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, பிரிட்டிஷ்  பிர­தமர் திரேசா மே உள்­ளிட்ட பல்­வேறு தலை­வர்­க­ளையும் சந்­தித்து ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

மேலும் 20ஆம் திகதி உரை­யாற்­ற­வுள்ள ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன   அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும்  வேலைத்திட்டங்கள்  போன்றவை தொடர்பாக  உலகநாடுகளின் தலைவர்களுக்கு  விளக்கமளிக்கவிருக்கிறார்.