சீனாவில் கர்ப்பிணி தாயொருவர் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க கணவன் ஒத்துக்கொள்ளாத நிலையில் பிரசவ வலிக்கு பயந்து வைத்தியசாலை கட்டிடத்தில் இருந்து குதித்து தறகொலை செய்து கொண்டுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அதிக வயிற்றுவலியால் துடிக்க வைத்தியர்கள் பெண்ணின் வயிறிலுள்ள குழந்தையை ஸ்கேன் செய்த போது குழந்தையின் தலை பெரிதாக உள்ள காரணத்தினால் சுக பிரசவம் செய்வது ஆபத்தானது அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை பிரசவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலை நிர்வாகம் குறித்த பெண்ணின் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் கையெழுத்து கேட்ட போது அவர்கள் கையெழுத்திட மறுத்து தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் சுக பிரசவத்தின் மூலம் குழந்தையை பிரசவித்து தாருமாறு கேட்டுள்ளனர்.

இந் நிலையில் அதிக வலியினால் துடி துடித்த குறித்த பெண் தான் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை அறை யன்னலினூடாக குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் குறித்த பெண் மட்டுமல்லாது அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.