எண்ணெய் கலப்பில் பாதிப்படைந்த கிணறுகள் குறித்து ஆய்வு

Published By: Robert

26 Jan, 2016 | 02:36 PM
image

யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் கலப்பினால் பாதிப்படைந்த நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பது தொடர்பாகப் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 10 மணி முதல் 1.30மணி வரை முருகேசு பண்டிதர் வீதியிலுள்ள சுன்னாகம் தெற்குச் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. 

நிகழ்வில் கலந்து கொண்ட புத்தி ஜீவிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களால் இப்பிரச்சினைக்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எவ்வித தாமதங்களும் இன்றித் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்களுக்கு உள்ளனர்களுக்கு மருத்துவ நிவாரணங்களை உடனடியாக வழங்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரைவடிகட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்கவேண்டும்.

இப்பிரதேசத்தில் நீரியல் ஆய்வு மையம் ஒன்றினை ஸ்தாபிக்கவேண்டும். தொடர்ச்சியான ஆய்வுகளைச் சரியான முறையில் விரைவாக முன்னெடுக்கவேண்டும்.

இவ் இயற்கைப் பேரனர்த்தத்திற்குச் சரியான தீர்வு கிடைக்கும் வரை வட மாகாண சபை முன்பாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு எதிராகவும் மக்கள் அனைவரும் அணி திரண்டு தொடர்ந்து போராடவேண்டும் ஆகிய தீர்மானங்களுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளன.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை இவ் அனர்த்தம் தொடர்பாக அதிகூடிய கவனமெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்துக் கிணறுகளின் நீரும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு அவைபற்றிய தனித்தனி அறிக்கைகள் வழங்கப்படவேண்டும். அத்துடன் ஏற்கனவே ஆய்வுகளில் இனங்காணப்பட்ட அபாயகரமான நிலையில் உள்ள கிணறுகளை அடையாளப்படுத்தி உடனடியாக அத்தகவலை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

(உடுவில் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38