இன்றைய திகதியில் இருசக்கர வாகனங்களில் நாளாந்தம் பயணிக்கும் ஆண் பெண் என இருபாலாருக்கும் கழுத்து வலி, தோள்பட்டை வலி, கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு வலி, சுண்டுவிரலும் அதன் அடுத்த விரலுட்ன் சிறிது தூரம் வரையிலான வலி என பலவகையான வலிகள் உண்டாகின்றன. இதில் கழுத்து வலி வந்தால் மிகவும் சிரமப்படுகிறோம்.

கழுத்து வலி தைரொய்ட் பிரச்சினையால் வரலாம். பின்பக்க கழுத்து எலும்பு தேய்மானமடைவதால் வரலாம். கழுத்துப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தால் வரலாம்.காசநோயின் தாக்கத்தால் வரலாம். இப்படி பல காரணங்களால் கழுத்து வலி வரலாம். 

கழுத்து வலி வந்தால் ஐஸ் அண்ட் ஹீட் தெரபி எனப்படும் வெந்நீர் ஒத்தடம் மற்றும் ஐஸ்க்யூப் ஒத்தடம் கொடுக்கலாம். பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ பயிற்சி அளிக்கலாம். வலி நிவாரணிகளையும், வலி தணிப்பிற்கான ஊசிகளையும் பயன்படுத்தலாம். தசைகளை தளர்வுறச் செய்யும் பயிற்சியை அளிக்கலாம். கழுத்து பட்டை அணிந்து வலியை எதிர்கொள்ளலாம். ட்ராக்ஷன் சிகிச்சையை செய்து கொள்ளலாம். இப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு கழுத்து வலிக்கான நிவாரணங்களை முழுமையாகப் பெறலாம். 

அத்துடன் இத்தகைய சிகிச்சைகளின் போது நோயாளிக்கு பூரண ஓய்வு தேவை. 

வைத்தியர். கீதா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்