நமுனுகுல, தென்னக்கும்புர பகுதியில் டிப்பர் வாகனமொன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் குறித்த வாகனத்தில் சென்ற அறுவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மேலதிக சிகிச்சைக்காக  மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது தென்னகும்புர தேர் திருவிழாவிற்கு மின்பிறப்பாக்கியை டிப்பர் வாகனமொன்றின் மூலம் ஏற்றிச் சென்ற போதே விபத்து நேர்ந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.