காதலன் கண்முன்னே இளம்பெண்னை 20 பேர் கொண்ட குழுவினர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா நகர் அருகில் டிஜி என்ற இடத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் காதலன் வேறு பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து நிறுத்தியது.

குறித்த குழுவினர் அப்பெண்ணின் காதலனை ஏன் பழங்குடியின பெண்ணுடன் பழகுகிறாய் என்று கூறி சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த கையடக்கத்தொலைபேசியினை பறித்துக் கொண்டுள்ளனர்.

பின்னர் காதலனை கத்தி முனையில் மிரட்டி மரத்தில் கட்டி வைத்து, காதலன் கண் எதிரில் அவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து குறித்த கும்பல் அவர்களின் நண்பர்களையும் வரவழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது 20 பேர் சுமார் 3 மணி நேரம் இந்த கொடூர  செயலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது  ஒருவன் மாணவியை கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் படம் பிடித்து மிரட்டியதாகவும்,அதன் பிறகு மாணவியை அங்குள்ள  குளத்துக்கு அழைத்துச் சென்று தடயங்களை அழித்து விட்டு  தப்பியதாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரின் காதலன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

உடனே பொலிஸார் விரைந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருவதோடு,மற்றவர்களையும் தேடி பொலிஸார் வலைவீசி வருகிறார்கள்.

குறித்த சம்பவத்தில் பெண்ணினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குழுவினரில் அனைவரும் 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.