பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தேரரை கைதுசெய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.