காலமான பிரபல மலையாள நடிகை கல்பனாவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளது.

"சின்னவீடு" என்ற படத்தின் மூலம் நமக்கு அறிமுகமாகி, தனது நடிப்புத் திறமையால் இன்று வரை நம் எல்லோர் மனதிலும் தாய்மை உணர்வோடு நிறைந்துவிட்ட அவரை, காலத்திடம் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் தெலுகு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். அயராது கலைப்பணியாற்றியவர். பழகுவதற்கு இனிமையானவர்.

நகைச்சுவை குனசித்திரம் என்ற இரண்டிலும் தனது நடிப்புத் திறமைக்காக "தேசிய விருது" பெற்றவர்.

நாங்கள் பொறுப்பேற்று கொண்ட நாளிலிருந்து தன்னை நடிகர் சங்க உறுப்பினராக்கி கொள்ள ஆசைப்பட்டு விரைவில் "வாழ்நாள் உறுப்பினர் கார்டு"எடுக்கவிருந்தார்.

அதன் ஈரம் காய்வதற்குள் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது! அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

தகவல் : சென்னை அலுவலகம்