மன்னாரில் தெரிவுசெய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகளின்  வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்பு செயற்றிட்டம் இன்று மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக ஜெய்கா மண்டபத்தில் இன்று  காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரியவின்  தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்கவின்  வழி காட்டலில் மன்னார் மாவட்ட இணைப்பதிகாரி  லெப்டினண்ட் கேர்ணல் ரி.எஸ்.எம்.எப்.டபில்யூ   குணவர்தனவினால் தெரிவு செய்யப்பட்ட 11 பயணாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள்,  அதற்கான உணவு மற்றும் மருந்து பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.