(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இறுதி யுத்தகாலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் இராணுவத்திடம் இல்லை எனில் யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா? பன்னாட்டு இராணுவம் நாட்டில் இருந்தால் காணாமல் போனவர்களின் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்து தேடி பார்க்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். 

அத்துடன் இராணுவ தளபதிகள் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள நிலையில் இராணுவம் ஒரு  குற்றமும் இழைக்கவில்லை என்றால் இராணுவ தளபதிகள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று உண்ணாட்டரசிறைச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.