(ரொபட் அன்டனி)

சுதந்திரக் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிப்பக்கம் 12 எம்.பி. மார்கள் செல்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எதிர்வரும்  தேர்தல்களில் எம்முடன் இணைந்து போட்டியிட வருமாறு  கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும்  அமைச்சருமான  மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

Image result for மஹிந்த அமரவீர virakesari

சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.