HUTCH அறிமுகத்தில் HNB வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர ATM மீள்நிரப்பு (Reload) வசதி

Published By: Priyatharshan

07 Sep, 2017 | 02:28 PM
image

இலங்கையில் மொபைல் புரோட்பான்ட் சேவையை வழங்குவதில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற HUTCH, ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) வலையமைப்பின் கீழ் நாடளாவியரீதியில் அமைந்துள்ள ATM இயந்திரங்கள், பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் கருமபீடங்கள் மூலமான 24 மணி நேர மீள்நிரப்பு சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தனது வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சௌகரியத்தை வழங்கும் முகமாக நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு பெறுபேறாக இச்சேவை அமையப் பெற்றுள்ளது.

HNB வாடிக்கையாளர்களாக உள்ள HUTCH பாவனையாளர்கள் நாடெங்கிலுமுள்ள 500 இற்கும் மேற்பட்ட HNB ATM மையங்கள் மூலமாக தமது மொபைல் கணக்குகளுக்கு தற்போது மீள்நிரப்பலை மேற்கொள்ள முடியும். 

HNB வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, HUTCH பாவனையாளர்கள் அனைவரும் HNB பண வைப்பு இயந்திரங்கள்ஃகருமபீடங்கள் வலையமைப்பின் மூலமாக பணத்தை உபயோகித்து இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Hutch top-up தேவைகள் மற்றும் பாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளையும் HNB இணையத்தள வங்கிச்சேவையின் மூலமாக மேற்கொள்ள முடியும். தினசரி 24 மணி நேரமும் கிடைக்கப்பெறுகின்ற இந்த சுயசேவை top-up பொறிமுறையானது இரவு வேளைகள் அல்லது வார இறுதி நாட்களில் எந்தவொரு விற்பனை நிலையமும் திறந்திராத சமயங்களில் குறிப்பாக இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

HNB கணக்கு வாடிக்கையாளர்கள் HNB ATM மையங்கள் அல்லது கிளைகளுக்கு சென்று ஏனைய வங்கிச்சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமயத்தில் அல்லது தமது HNB ATM அட்டைகளை உபயோகித்து தமது Hutch மொபைல் இணைப்பிற்கான மீள் நிரப்பல் தேவைகளை சௌகரியமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த முன்னெடுப்பு தொடர்பில் HUTCH Sri Lanka நிறுவனத்தில் கையகப்படுத்தல் மற்றும் விநியோகப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றும் மெல்றோய் தோமஸ் கருத்து தெரிவிக்கையில்,

“Hutch எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செழுமையான மொபைல் அனுபவத்தை வழங்கி வந்துள்ளது. வங்கியின் ATM வலையமைப்பின் மூலமாக மீள்நிரப்பு செய்யும் வசதியின் அறிமுகத்தை, வேலைப்பளுமிக்க தமது வாழ்வில் சௌகரியத்தை நாடுகின்ற எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் போற்றுவர் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது.” என்று குறிப்பிட்டார்.

HNB வங்கியில் டிஜிட்டல் வங்கிச்சேவைப் பிரிவின் முகாமையாளரான சக்ஷித அமரவர்த்தன  கூறுகையில்,

“மீள்நிரப்பல் தேவைகளுக்கு பாரம்பரிய மார்க்கங்களை உபயோகித்துவந்த மொபைல் பாவனையாளர்கள் தற்போது 24 மணி நேரமும் கிடைத்தல், சௌகரியம் மற்றும் அந்தரங்க பாதுகாப்பு காரணமாக சுய-சேவை மார்க்கங்களை உபயோகிப்பதற்கு மாறி வருகின்றனர். 

இத்தகைய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த ATM வலையமைப்பின் மூலமாக தமது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் வகையில் சரியான நேரத்தில் Hutch இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.” என்று குறிப்பிட்டார். 

இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay இனை இயக்கி வருகின்ற LankaClear (Private) Limited நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Technnovation விருதுகள் 2017’ நிகழ்வில் இலங்கையின் மிகச் சிறந்த ATM வலையமைப்பு என்ற விருதை HNB வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ள HUTCH வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்துடன் கூடிய இந்த மீள்நிரப்பல் சேவையை கிடைக்கச் செய்யும் முகமாக இலங்கையிலுள்ள ஏனைய பிரதான வங்கிகளுடன் கூட்டிணையும் முயற்சிகளில் HUTCH தற்போது ஈடுபட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57