மனித ஆட்­க­டத்­தலை தடுப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையில் ஆஸி இலங்கை கைச்­சாத்து

Published By: Robert

07 Sep, 2017 | 10:52 AM
image

மனித ஆட்­க­டத்­தலை தடுக்கும் வகையில் இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. 

அவுஸ்­தி­ரே­லிய  குடி­வ­ரவு மற்றும் எல்லை பாது­காப்பு செய­லாளர் மைக்கேல் பீசுல்லோ மற்றும் இலங்கை பாது­காப்பு செய­லாளர்  கபில வைத்­தி­ய­ரத்ன  ஆகி­யோரால் இந்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. 

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இலங்கை ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் மனித ஆட்­க­டத்தல் செயற்­பா­டுகளை  தடுக்கும்  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் வகையில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இலங்கை ஆகிய நாடு­க­ளுக்கு  இடை­யி­லான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ளது.  

அவுஸ்­தி­ரே­லிய  குடி­வ­ரவு மற்றும் எல்லை பாது­காப்பு செய­லாளர் மைக்கேல் பீசுல்லோ மற்றும் இலங்கை பாது­காப்பு செய­லாளர்  கபில   வைத்­தி­ய­ரத்ன  ஆகி­யோரால் கான்­பெரா மாநாட்டில் இந்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லியா தனது நட்பு நாடு­க­ளுடன் இந்த உடன்­ப­டிக்கை செய்­து­கொள்ளும் நிலையில்  மனித ஆட்­க­டத்­தலை தடுக்கும் வகையில் இந்த உடன்­ப­டிக்கை  இலங்கை உட்­பட சர்­வ­தேச நட்பு நாடு­க­ளுடன்   வலு­வா­னதும் மற்றும்  நட்­பு­றவை பலப்­ப­டுத்தும் வகையில் இந்த உடன்­ப­டிக்­கையை செய்­துள்­ளது. 

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளுக்கு இடையில் இந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டதில் இருந்து குறிப்­பாக 2013 ஆம் ஆண்டில் இருந்து இலங்­கையில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு மனித ஆட்­க­டத்தல் முன்­னெ­டுக்கும்  நகர்­வுகள் அனைத்தும் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­தினால் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த வெற்றி செயற்­பா­டுகள் தொட­ரவே இரு­நாட்டு அர­சாங்­கமும் உடன்­ப­டிக்­கையை நீடித்து வரு­கின்­றது. 

இப்­போது செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள இரு­நாட்டு உடன்­ப­டிக்கை மூல­மாக எதிர்­கால நகர்­வு­களை தடுக்­கவும் குறிப்­பாக ஆட்­க­டத்தல், போதைப்­பொருள் கடத்தல், மனித உரி­மைகள் மீறல், சட்­ட­வி­ரோதப் பொருட்­களின் செயற்­பாட்டை நிறுத்­துதல், பணம் மோசடி செய்தல் மற்றும் குற்றம் ஆகி­ய­வற்றின் மீது இலக்கு வைத்தே பல­மான வகையில் இந்த உடன்­ப­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆகவே ஆட்­க­டத்தல் மற்றும் போதைப்­பொருள் கடத்தல் நகர்­வு­களை தடுக்கும் செயற்­பாட்டில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிக நீண்டகால நட்புறவுடனும் பாதுகாப்பு செயற்பாடுகளுடனும் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறான உடன்படிக்கைகள் மேலும் இரு நாட்டு உறவில் பலமாக அமையும் என இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50