பிணை­முறி விசா­ர­ணையில் முக்­கி­ய­மான ஆதா­ரங்­க­ளாக கரு­தப்­பட்ட பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தொலை­பேசி கலந்­து­ரை­யா­டல்­களை தர­வி­லி­ருந்து அழிக்குமாறு கூறியது அந்­நி­று­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சியஸ் என நிரூ­ப­ன­மா­கி­யுள்ள நிலையில், மத்­திய வங்­கி­யி­லி­ருந்து பிணை­முறி தொடர்­பி­லான இர­சிய தர­வுகள் அர்ஜூன் அலோ­சி­ய­சுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை நேற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

முக்­கி­ய­மான தர­வுகள் அனைத்தும் அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று அழிக்­கப்­பட்ட தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பாடல் நிபு­ணர்­களால் மீள பெறப்­பட்டு அவற்றை ஆணைக்­குழு செவி­ம­டுத்­தி­ருந்­தது. இதன்­போது பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சி­ய­சுக்கு பல தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளமை அம்­ப­ல­மா­னது.

அக்­கா­லப்­ப­கு­தியில் மத்­திய வங்­கியின் ஆளு­ந­ரா­க­வி­ருந்த அர்ஜூன் மகேந்­திரன் செயற்­பட்­ட­மையால் அவரை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை பார்­வை­யி­டு­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு அனு­ம­திக்­க­வில்லை.

பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நேற்றும் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி ஏலத்தின் முக்­கிய முத­லீட்டு நிறு­வ­ன­மாக கரு­தப்­படும் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் அனைத்து வகை­யான கணக்­கு­களும் திணைக்­க­ளங்­களும் பரீட்­சிக்­கப்­ப­டு­மென ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் சார்பில் குறுக்கு விசா­ர­ணை­யாக அந்­நி­று­வ­னத்தின் பிர­தான சந்­தைப்­ப­டுத்தல் முகா­மை­யாளர் நுவன் சல்­காது நேற்று விசா­ர­ணைக்­கென அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இதன்­போது அவ­ரிடம் தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பான விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

நேற்று காலை 10.00 மணிக்கு ஆரம்­ப­மா­கிய பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசாரணை பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி கசுன் பலிசேனின் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு ஆரம்­ப­மா­கி­யது. 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­குகள் அனைத்தும் இதன்­போது மீளாய்­வுக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அத்­தோடு பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பிலும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

பிணை­முறி விவ­கா­ரத்தின் முக்­கிய கால­கட்­ட­மாக கரு­தப்­படும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­குதி கரு­தப்­ப­டு­கின்­றது. குறித்த காலப்­ப­கு­தியில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட பிணை­முறி தொடர்­பான அனைத்து ஆவ­ணக்­காப்­புக்­களும் அது குறித்­தான விட­யங்­களும் சாட்­சிப்­ப­தி­வு­க­ளுக்­காக மீள்­ப­ரி­சோ­தனை செய்­யப்­பட்­டன.

பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்பட்ட விசா­ரணை அணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ் ஜெய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

கொழும்பு - புதுக்­க­டையில் உள்ள நீதி­ய­மைச்சின் கட்­டிடத் தொகு­தியில் அமைக்­கப்பட்­டுள்ள மேற்­படி விசா­ரணை ஆணைக் குழுவின் விசா­ரணை அறையில் இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்து முதலில் பிரதி சொலி­சிஸ்ட்டர் ஜெனரல் மிலிந்த குணத்­தி­லக்­கவின் நெறிப்­ப­டுத்­த­லுடன் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

மேலும் மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பிணை­முறி விநி­யோகம் தொடர்பில் வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தற்­காக பே்பபச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சி­யசை முன்­னி­லை­யா­கு­மாறு ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் அலு­வ­லகம் மற்றும் வீட்­டுக்கு சென்­ற­போ­தி­லும் அவரை சந்­திக்க முடி­ய­வில்லை என குற்­ற­வியல் விசா­ரணை திணைக்கள் அதி­கா­ரிகள் நேற்று ஆணைக்­கு­ழுவில் அறி­வித்­தனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வழங்கிய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் முகாமையாளர் நுவல் சல்காதுவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறும் ஆணைக்குழு உத்தரவிட்டது. அத்தோடு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட சொலிசிஸ்ட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அவரது பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதேவேளை அர்ஜூன் அலோசியஸின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு இலக்கங்களை சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.