வைத்தியர்கள் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பு

Published By: Raam

06 Sep, 2017 | 06:45 PM
image

வெலிமடை அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

42 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடவேண்டிய குறித்த வைத்தியசாலையில் தற்போது 21 வைத்தியர்களே கடமையில் உள்ளதாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர்கள் பற்றாக்குறை சம்மந்தமாக தாம் ஏற்கனவே பல முறை சம்மந்தபட்ட தரப்பினருக்கு தெரிவித்திருந்த போதிலும் அதற்கான தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையினால் தாம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வெலிமடை கிளையின் செயலாளர் நாமல் பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.

ஊவா பரணகம, வெலிமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட தரப்பினர் முன்வந்து வெலிமடை வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர்களை நியமித்து தரும் வரை தாம் இப்பணி பகிஷ்கரிப்பினை தொடரவுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர, வெளி நோயாளர் பிரிவு உட்பட ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

எது எவ்வாறாயினும் வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படுவது நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04