சுங்க வரி திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானை தந்தங்கள்  இன்று காலிமுகத்திடலில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டன.

368 மில்லியன் ரூபா பெறுமதியான 359  யானை தந்தங்களே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டன.

கென்யாவில் இருந்து இலங்கையின் ஊடாக டுபாய்க்கு கொண்டு செல்வதற்கு முற்பட்ட போது, குறித்த தந்தங்கள் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சுங்க வரி திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.