பட்டிபொல வாகன விபத்தில் ஒருவர் பலி

Published By: Digital Desk 7

06 Sep, 2017 | 02:17 PM
image

பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் பட்டிப்பொல 24 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில்  பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் கேகாலை அரநாயக்க பகுதியை சேர்ந்த  20 வயதுடைய யூ.எல். சம்பத் சோமரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்தி முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியையும், கார் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களை  இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22