பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர்  ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கலகொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் கைது செய்து ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே அவர் இன்று ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.