பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகையொன்று இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளையில், நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு மேலாடை இல்லாமல் நின்றுக்கொண்டு இருந்தபோது பிரபல பத்திரிகையின் நிருபரொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இளவரசியின் அனுமதி இல்லாமல் குறித்த அரை நிர்வாணப்படம் பாரீஸில் வெளியாகும் பிரபல பத்திரிகையில் அச்சிடப்பட்டது.பத்திரிகையின் இந்த செயலால் அரண்மனைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக இளவரசர் வில்லியமும் இளவரசி கேட் மிடில்டனும் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பத்திரிகையின் இந்த அத்துமீறலுக்கு 1.5 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என கேட் மிடில்டன் கோரியுள்ளார்.இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று பாரீஸ் நீதிமன்றத்தில் நிகழ்ந்தபோது, பிரித்தானிய இளவரசியின் அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகை இளவரசிக்கு 1,03,000 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.